சேலத்தில் பயங்கரம்... 16 வயது சிறுமியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை!
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக லாரி கிளீனர் ஒருவரை ஆத்தூர் மகளிர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் லோகநாதன், லாரி கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரைத் திருப்பூருக்குக் கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்தச் சிறுமிக்கு லோகநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமி காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். செல்போன் சிக்னல் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், லோகநாதன் திருப்பூரில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

திருப்பூருக்கு விரைந்த போலீசார், சிறுமியைக் கடத்திச் சென்ற லோகநாதனை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு ஆத்தூருக்கு அழைத்து வரப்பட்டார். லோகநாதன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், அந்தச் சிறுமிக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
