விழுப்புரத்தில் பயங்கரம்... நள்ளிரவில் பிரபல ரவுடியைக் கொல்ல முயற்சி!

 
மதுரை என்கவுண்டர் போலீசார்

விழுப்புரம் அருகே நள்ளிரவில் பிரபல ரவுடியை கிரைண்டர் குழவி கல்லை தலையில் போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மெண்டல் கதிர் (எ) கதிரவன் (40). அந்த பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த மெண்டல் கதிரவன், நேற்று முன்தினம் நள்ளிரவு, மேல்தெரு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விராட்டிகுப்பம்பாதையைச் சேர்ந்த மேகநாதன் (44) மற்றும் அன்பு (40) ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. டீக்கடையில் ஏற்பட்ட சாதாரணத் தகராறு முற்றிய நிலையில், மோதல் வெடித்தது: முதலில் ஒருவரையொருவர் அங்கிருந்த டீ குடிக்கும் கண்ணாடி கிளாஸால் தாக்கி குத்திக் கொண்டனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

மோதலின் உச்சகட்டமாக, மேகநாதன் என்பவர் அங்கிருந்த கிரைண்டர் குழவி கல்லை எடுத்து, கீழே விழுந்த கதிரவனின் தலையில் போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கதிரவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சண்டை

இது குறித்துத் தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய மேகநாதன் மற்றும் அன்பு ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!