ஏற்காட்டில் பயங்கரம்... "பணம் கொடுத்தால்தான் உல்லாசம்" - கள்ளக்காதலியைத் தீர்த்துக் கட்டிய காதலன்!
மலைகளின் இளவரசியான ஏற்காட்டில், ஒரு தங்கும் விடுதி அறையில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய 4 ஆண்டு காலத் தொடர்பு, பணத் தகராறால் கொலையில் முடிந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஏரியூரைச் சேர்ந்தவர் சாலா (33). இவருக்குத் திருமணமாகி 15 மற்றும் 13 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த சாலாவுக்கு, சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரீஷியனான பார்த்திபனுக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது.

கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்த இவர்களது கள்ளத்தொடர்பு, நேற்று ஏற்காட்டில் உள்ள ஒரு விடுதி அறைக்கு இவர்களை அழைத்துச் சென்றுள்ளது. அறையில் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, சாலா பார்த்திபனிடம் பணம் கேட்டுள்ளார். "உல்லாசம் மட்டும் அனுபவிக்கிறாயே.. பணம் எங்கே?" எனச் சாலா கேட்க, "ஊருக்குப் போய் தருகிறேன்" எனப் பார்த்திபன் பதிலளித்துள்ளார்.
"பணம் கொடுத்தால் தான் மீண்டும் உல்லாசமாக இருக்க முடியும்" எனச் சாலா பிடிவாதம் பிடித்ததால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆத்திரமடைந்த பார்த்திபன், சாலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அறையைப் பூட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

மாலை 6 மணிக்கு வாலிபர் மட்டும் தனியாக வெளியே செல்வதைச் சிசிடிவி மூலம் கண்ட விடுதி ஊழியர்கள், சந்தேகமடைந்து அறையைத் திறந்து பார்த்த போது சாலா சடலமாகக் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து உடனே விரைந்து சென்ற ஏற்காடு போலீசார், செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து, இளம்பிள்ளையில் பதுங்கியிருந்த பார்த்திபனை கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
