குடியரசு தின விழாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்... உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரம்!
கடந்த நவம்பர் மாதம் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் வடு மறைவதற்குள், மீண்டும் ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் டெல்லியைச் சூழ்ந்துள்ளது. இதனால் தலைநகர் முழுவதும் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த நிழல் உலகக் கும்பல்கள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள், இந்தியாவில் உள்ளூர் குற்றக் கும்பல்களைத் தங்களது "காலாள் படைகளாக" பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அச்சுறுத்தல் டெல்லி மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் முக்கியச் சந்தைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவசர காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து டெல்லி வடக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பல இடங்களில் 'மாக்க் டிரில்' (Mock Drill) எனப்படும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன.
சமீபத்தில் அல்பலா பல்கலைக்கழகச் சொத்துக்கள் முடக்கப்பட்டதும், கார் குண்டு வெடிப்பு வழக்கில் பல டாக்டர்கள் கைதானதும் ஒரு பெரிய பயங்கரவாத வலையமைப்பு டெல்லியைச் சுற்றிச் செயல்படுவதை உறுதி செய்துள்ளன.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் குடியரசு தின விழாவுக்கான தயாரிப்புகள் கர்தவ்ய பாதையில் (Kartavya Path) விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன: இந்த ஆண்டு சுமார் 30 மாநிலங்கள் மற்றும் துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.
"வந்தே மாதரம்" பாடல் உருவான 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் நவீன ஆயுதங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் தளவாடங்கள் இந்த அணிவகுப்பில் முக்கிய இடம்பிடிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
