கிரிப்டோ ஹவாலா மூலம் பயங்கரவாதத்திற்கு புத்துயிர்? உளவுத் துறை அதிர்ச்சி எச்சரிக்கை!
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் முயற்சியாக கிரிப்டோ ஹவாலா நிதி பயன்படுத்தப்படலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத நிதி இந்தியாவுக்குள் வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனா, மலேசியா, மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோ ஹவாலா வலையமைப்பு செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிரிப்டோ நிதி, ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் டிஜிட்டல் வாலட்டுகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த நிதியை அவர்கள் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள வணிகர்களிடம் காட்டி பணமாக மாற்றுகின்றனர்.

மேலும், மூன்றாம் நபர்களின் வங்கி கணக்குகளில் அவர்களது ஒப்புதலுடன் பணம் செலுத்தப்படுகிறது. இதற்காக 0.8 முதல் 1.8 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கையால் பயங்கரவாதம் குறைந்துள்ள நிலையில், இந்த புதிய நிதி பாதை குறித்து கிடைத்த தகவல்கள் அதிகாரிகளை தீவிர கண்காணிப்புக்கு தள்ளியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
