ஹனுக்கா கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி... சிட்னியில் பயங்கரவாத தாக்குதல்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான யூதர்கள் கூடியிருந்த போது, பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. எதிர்பாராத இந்த தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமைதியான பண்டிகை சூழல், நொடிகளில் அலறல் சத்தமாக மாறியது.
முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த தந்தை–மகன் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் தந்தை சாஜித் அக்ரம் சுட்டுக்கொல்லப்பட்டார். கடுமையாக காயமடைந்த மகன் நவீத் அக்ரம் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது கோமாவில் இருந்து மீண்ட நவீத் அக்ரமுக்கு எதிராக கொலை, பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட 59 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, அவர் காணொலிக்காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவையே உலுக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
