கோவை சாலைகளில் டெஸ்லா சைபர் டிரக்… வைரல் வீடியோ!

 
tesla
 

உலகப் புகழ்பெற்ற எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் கோவை சாலைகளில் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரூ.5 கோடி மதிப்புள்ள இந்த சொகுசு எலக்ட்ரிக் வாகனம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. வித்தியாசமான வடிவமைப்பு காரணமாக சாலையில் சென்றவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

தமிழகத்தின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பல சொகுசு கார்கள் இயங்கினாலும், சைபர் டிரக் முதன்முறையாக காட்சியளித்தது. விண்வெளி ஓடத்தை போன்ற வடிவமைப்பும் துருப்பிடிக்காத இரும்பு கவசத்துடன் தயாரிக்கப்பட்ட உடலமைப்பும் வாகனத்தை தனித்துவமாக காட்டியது. சமீபத்தில் சென்னை, மும்பை போன்ற நகரங்களிலும் இந்த வாகனம் காணப்பட்டது.

கோவையின் அவினாசி சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இந்த வாகனம் சென்றபோது கார் பிரியர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். வாகனத்தின் விலை மற்றும் இறக்குமதி வரி குறித்து விவாதங்கள் எழுந்தாலும் அதன் தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது. கோவையில் இவ்வகை வாகனம் இயங்குவது நகரத்தின் வளர்ச்சியை காட்டுவதாக இளைஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!