டெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம். அதன்படி இடைநிலை ஆசிரியர்கள் தாள்–1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் தாள்–2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பரில் பெறப்பட்டன. தாள்–1 தேர்வு நவம்பர் 15-ம் தேதி 367 மையங்களில் நடைபெற்றது. இதில் 92,412 பேர் எழுதினர்.
தாள்–2 தேர்வு நவம்பர் 16-ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் 3,31,923 பேர் பங்கேற்றனர். இதனிடையே, ஜனவரி 28-ம் தேதி டெட் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை அரசு குறைத்து அரசாணை வெளியிட்டது. பொதுப் பிரிவுக்கு 60 சதவீதம், பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம், எஸ்சி மற்றும் பழங்குடியினருக்கு 40 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த குறைந்த மதிப்பெண் விதிமுறை 2025 நவம்பர் டெட் தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. குறைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதி பெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 2-ம் தேதி மாலை முதல் www.trb.tn.gov.in இணையதளத்தில் தகுதி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
