தை அமாவாசை... ராமேஸ்வரத்தில் குவிந்த பொதுமக்கள்... முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 
ராமேஸ்வரம் பேருந்து

இன்று தை அமாவாசை என்பதால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் வசதியை முன்னிட்டு  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம், சேலம், கோவை மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரு ஆகிய முக்கிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அமாவாசை  பித்ரு

அதே போன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்தில் வழிபாடுகள், பித்ரு காரியங்களை முடித்துவிட்டுத் திரும்பும் பக்தர்களுக்காக, ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தங்களது பயணத்தை உறுதி செய்யவும் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in அல்லது TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!