நாளை தை கிருத்திகையும், செவ்வாய்கிழமையும் சேர்ந்து வருவதால் இதை செய்ய மறக்காதீங்க!

 
murugan

 

தை மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கிருத்திகை நட்சத்திரம் வருவதால், அந்த நாள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு உரிய நாள் என்பதால், கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்தால் நாளை  ரொம்ப விசேஷம் தான். சூரியன் மகர ராசியில் இருப்பதும் இந்த நாளின் சிறப்பை அதிகரிக்கிறது.  

முருகன் முருகர் சஷ்டி

வலது கண்ணை சூரியனும், இடது கண்ணை சந்திரனும் ஆள்கிறார்கள். இருவரையும் ஒருங்கே வைத்திருப்பவர் அர்த்தநாரீஸ்வரர். எனவே சிவன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்ததாகும். சிவனுக்கு வில்வம் வைத்து அர்ச்சனை செய்தால் நோய் நிவாரணம் கிடைக்கும். முருகன் கோவிலில் தாமரை மலர் கொடுத்து அர்ச்சனை செய்யலாம். நிலம், வீடு வாங்க நினைப்பவர்கள் பூமிநாதர் சன்னதியில் வழிபடலாம்.

முருகன்

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் மாட்டுக்கு வெல்லம் கொடுக்கலாம். இது எளிய பரிகாரமாக கருதப்படுகிறது. வீட்டில் முருகர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து மலர் சூட்டி திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் பாடலாம். ஆறு வகை மலர்களால் அர்ச்சனை செய்தால் விசேஷம். காலையில் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தை கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை முருகனுக்கு மிக உகந்த நாட்களாக பக்தர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!