வடலூரில் 155வது தைப்பூச விழா... 7 திரை விலக்கி நாளை ஜோதி தரிசனம்!

 
வடலூர்

வடலூரில் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 155வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்திய ஞானசபையில் அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

வள்ளலார் பிறந்த மருதூர், நற்கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடிகள் ஏற்றப்பட்டன. பார்வதிபுரம் கிராம மக்கள் பழங்கள், சீர்வரிசை பொருட்கள் மற்றும் வள்ளலார் பயன்படுத்திய பொருட்களுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றத்தில் பங்கேற்றனர். ‘அருட்பெருஞ்ஜோதி’ பாடல்கள் முழங்க சன்மார்க்க அன்பர்கள் கொடியை ஏற்றினர்.

நாளை (பிப்ரவரி 1) ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 6 காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் 1700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!