தைப்பூசம்... அதிகாலை முதலே அறுபடை வீடுகளில் குவியத் தொடங்கிய முருக பக்தர்கள்!

 
thaipoosam

தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி, திருத்தணி உள்ளிட்ட கோயில்களில் இரவு முதலே பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் கோயில் வளாகங்கள் முழுவதும் பக்தி பரவியது.

தைப்பூசம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற உள்ளது.

சுவாமிமலை முருகன்

பெளர்ணமி தினம் என்பதால் திருப்பரங்குன்றத்தில் கிரிவலப் பாதையில் பக்தர்கள் காவடி எடுத்தவாறு திரண்டனர். கட்டண தரிசனத்திலும் நீண்ட வரிசை காணப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு அறுபடை வீடுகள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பின.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!