வடலூரில் தைப்பூச திருவிழா... 7 திரை விலக்கி ஜோதி தரிசனம்!
வடலூரில் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 155வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்திய ஞானசபையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

வள்ளலார் பிறந்த மருதூர், நற்கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடிகள் ஏற்றப்பட்டன. பார்வதிபுரம் கிராம மக்கள் பழங்கள், சீர்வரிசை பொருட்கள் மற்றும் வள்ளலார் பயன்படுத்திய பொருட்களுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றத்தில் பங்கேற்றனர். ‘அருட்பெருஞ்ஜோதி’ பாடல்கள் முழங்க சன்மார்க்க அன்பர்கள் கொடியை ஏற்றினர்.

இன்று பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் 6 காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறும். தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் 1700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
