தைப்பூசம், பெளர்ணமி கிரிவலம்... தமிழகம் முழுவதும் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
நாளை தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் தைப்பூசம், பெளர்ணமி கிரிவலம் என்று பொதுமக்களின் வசதிக்காக இந்த 3 நாட்களும் தமிழகம் முழுவதும் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களுக்கு நேற்று 360 பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று சனிக்கிழமை 485 பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், பெங்களூரு பகுதிகளில் இருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப பயணிகள் வசதிக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளதால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
