90 வயதில் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

 
தலாய்லாமா தலாய்லாமா
 

 

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தியானம் தொடர்பான பேசும் புத்தகத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. ஆன்மிகம் மற்றும் அமைதி குறித்து அவர் கூறிய கருத்துகள் பலரை ஈர்த்துள்ளன. வயதைத் தாண்டிய இந்த அங்கீகாரம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலாய்லாமா

இந்த பேசும் புத்தகம் தியானத்தின் முக்கியத்துவத்தை எளிய வார்த்தைகளில் விளக்குகிறது. மன அமைதி மற்றும் உள்ளார்ந்த சாந்தி பற்றி இதில் பேசப்பட்டுள்ளது. பல நாடுகளில் இந்த புத்தகம் வரவேற்பு பெற்றுள்ளது. ஆன்மிக இலக்கியத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. தலாய் லாமாவின் குரல் தான் இதன் தனிச்சிறப்பு.

இந்த கிராமி விருதை தலாய் லாமா சார்பில் இசையமைப்பாளர் ருபுஸ் பெற்றுக் கொண்டார். அவர் மேடையில் நன்றி தெரிவித்தார். தலாய் லாமாவின் போதனைகள் உலகுக்கு தேவை என்றார். அமைதி மற்றும் கருணை பற்றிய செய்தி இன்னும் பரவ வேண்டும் என்றார். இந்த விருது ஆன்மிக உலகிற்கு பெருமை சேர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!