நாளை 234 தொகுதிகளிலும் ”தளபதி விஜய் பயிலகம்” தொடக்கம்!!

 
ஆரம்பிச்சுட்டாய்ங்க...! வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக பெரும் அரசியல் நிகழ்வுகளை அடுத்தடுத்து நடத்தி வருகிறார். உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்க திட்டமிட்டார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்  ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ஊக்க தொகை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தார்.

விஜய்

அந்த வகையில் தற்போது   மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில்  ”தளபதி" யின்  சொல்லுக்கிணங்க  ஜூலை 15 ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில்  தமிழகத்தில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி மரியாதை செய்ய வேண்டும்.

விஜய்

அத்துடன்   அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். அதே போல்  பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழகத்தின்  அனைத்து தொகுதிகளிலும் "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்