செம!! ”தளபதி 68” மாஸ் அப்டேட்!! கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!!
தமிழ் திரை உலக ரசிகர்களால் இளையதளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் லியோ திரைப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் அவரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதன்படி ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next… pic.twitter.com/iw1M5Dy7x9
— Vijay (@actorvijay) May 21, 2023
இந்த படம் குறித்து நடிகர் விஜய் தனது ட்விட்டர் பதிவில் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகவும் , அடுத்த ஆண்டு திரைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தளபதி விஜய்யுடன் இணையும் 25வது தயாரிப்பு எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதால் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
பிகில்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தளபதி விஜய்யுடன் 2வது முறையாக இணைகின்றனர். . படத்திற்கான தலைப்பு, நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் தகவல்கள் அனைத்தும் வெகு விரைவில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!