தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமர பாலாலயம் - செப்புத் தகடுகள் ஆய்வு!
ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில், கொடிமரத்தைப் பழுதுபார்த்துச் சீரமைக்கும் மராமத்துப் பணிகளுக்காக இன்று (டிசம்பர் 10) பாலாலயம் நடைபெற்றது.

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் கலைநயம் மிக்க பிரமாண்டமான கோவில், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவில் கொடிமரத்தைப் பழுதுபார்ப்பதற்காகப் பணி தொடங்கும் முன், பழுது கண்டறியும் நடவடிக்கையாகக் கடலூர் இணை ஆணையர் உத்தரவின்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொடிமரத்தில் சாற்றப்பட்டிருந்த செப்புத் தகடுகள் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, அக்குழுவினர் செப்புத் தகடுகளின் எடையைப் பதிவு செய்து, அவற்றை கோவில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைத்தனர்.

பாலாலயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொடிமரத்தைப் பழுதுபார்க்கும் பணி விரைவில் நடைபெறும் என்றும், பணி நிறைவடைந்ததும் கொடிமரத்தில் மீண்டும் செப்புத் தகடுகள் பதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
