தஞ்சை திமுக மகளிர் மாநாடு தேதி தள்ளிவைப்பு.. 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல்!
திமுக மகளிர் அணி சார்பில் டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் பிரம்மாண்ட மாநாட்டின் தேதியை திமுக தலைமை மாற்றியமைத்துள்ளது. ஜனவரி 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி 26ம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி. தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1.25 லட்சம் மகளிர் இந்த மாநாட்டில் சீருடை அணிந்து பங்கேற்க உள்ளனர். இதற்காகச் செங்கிப்பட்டி பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிர்வாக காரணங்கள் மற்றும் மாநாட்டிற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும், அதிக அளவிலான தொண்டர்கள் பங்கேற்பதை உறுதி செய்யவும் இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
