நன்றி ஈரோடு... விஜய் தொண்டர்களுடன் செல்பி ... மாஸ் வீடியோ!
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் மைதானம் அமைக்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்க்கு, வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் ஆவேசமாக உரையாற்றினார்.
Thank you Erode 🙏🏻 pic.twitter.com/897ADrZtA4
— Vijay (@actorvijay) December 18, 2025
உரையை முடித்ததும், பிரசார வாகனத்தில் இருந்தபடியே விஜய் தொண்டர்களுடன் செல்பி வீடியோ எடுத்தார். தொடர்ந்து தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், விஜய்க்கு வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வு கூட்டத்தில் இருந்த தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “நன்றி ஈரோடு” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
