தர்பூசணி அமோக விளைச்சல்… கோடைக்கு முன்பே விவசாயிகள் மகிழ்ச்சி!

 
தர்ப்பூசணி தர்ப்பூசணி
 

கோடை தொடங்க உள்ள நிலையில் குளிர்ச்சி நிறைந்த தர்பூசணி அதிக அளவில் மகசூலுக்கு வந்துள்ளதால், திருத்தணி பகுதியில் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுகிய கால பயிரான தர்பூசணி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பழமாக இருப்பதால், மார்ச் முதல் வாரத்தில் கோடை தொடங்கும் முன்பே சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணி சாகுபடிக்கு உகந்த பட்டமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தர்ப்பூசணி

திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லகுப்பம், பூனிமாங்காடு அருகே உள்ள வெங்கடாபுரம், ஆற்காடுகுப்பம், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு தற்போது மகசூலுக்கு வந்துள்ளது. தோட்டக்கலை துறை நிதி உதவியுடன் மானியம் பெற்று, சொட்டு நீர் பாசன முறையில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் இறுதி வாரத்தில் விதைப்பு செய்யப்பட்ட தர்பூசணி, 60 முதல் 70 நாட்களில் முழுமையாக மகசூலுக்கு தயாராகியுள்ளது.

தர்ப்பூசணி

தற்போது காய்கள் நன்கு வளர்ந்து பக்குவ நிலையை எட்டியுள்ளதால், ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி தொடக்கத்திலிருந்தே சாலையோரங்களில் தர்பூசணி கடைகள் அமைத்து வியாபாரிகள் கிலோ ரூ.20க்கு வாங்கிச் செல்கின்றனர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால், வருவாய் உயரும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!