வீடியோ!! கலைஞர் ஆட்சியில் ரேஷன் பொருட்களை கடத்தியவன்!! திமுக பிரமுகர் அடாவடி !!

 
மேனகா

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா டிடி 487 திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலையில் விற்பனை செய்யும் பணியாளராக மேனகா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நுகர்வோர் பண்டகால சாலையில் மொத்தம் 1233 ரேஷன் கார்டுகள் உள்ளது. சந்தைப்பேட்டை நேருஜி நகர் வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு பொருள்களை வாங்குவது வழக்கம்.


இந்த நுகர்வோர் பண்டகால சாலையில் பொருள் வாங்க வந்த, திமுக நிர்வாகி அமீர் பாட்ஷா என்பவர் மேனகாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
கலைஞர் ஆட்சியின் போதே, மூடை மூடையாகவும் பெட்டி பெட்டியாக அரிசி பருப்புகளை தூக்கிச்சென்றோம், இப்போது என்ன சின்ன முதல்வர் ஆட்சி தானே என ஏளனமாக பேசினார். மேலும், பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் ஒருமையில் பேசியுள்ளார். ரெண்டு பாக்கெட் எண்ணெய் இல்லை என்று சொல்கிறாய்... என அவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேனகா

இதனால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்த நபர் கூறுவது உண்மையெனில் விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் பயந்து பயந்து வேலை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web