இஸ்லாமியர்களுக்கு தவெகவும், விஜய்யும் உறுதுணையாக இருப்பர்... புஸ்ஸி ஆனந்த்.!

 
தவெக

தமிழகம் முழுவதும்  வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.  அதன்படி, இன்று வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தவெக சார்பில்  தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

விஜய் தவெக மாநாடு
சென்னையில் மட்டும் 6 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது ஏராளமான பெண்களும், ஆண்களும் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் தவெகவினர் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  அந்த வகையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பனையூர் ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தவெக

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் கலந்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு,  தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ”இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்
உங்கள் வீட்டில் சொத்து எல்லாரும் வந்து எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேள்வி எழுப்பியதோடு, இஸ்லாமியர்களுக்கு தமிழக வெற்றிக் கழகமும் தலைவர் விஜய்யும் உறுதுணையாக இருப்பார்.  இஸ்லாமிய மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகமும் நிற்கும்” என கூறியுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?