நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு அனுமதி கிடையாது!

 
விஜய்  ஜனநாயகன்
 

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். மற்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தவெக விஜய்

கூட்டத்தின் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சி நடவடிக்கைகள், கட்சி விரிவாக்கம் போன்றவை விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

விஜய் புஸ்ஸி ஆனந்த் ஆதவ் அர்ஜுனா

புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசிய மாநில அந்தஸ்து, தமிழக–புதுச்சேரி ஒரே குடும்பம் போன்ற கருத்துகளை மாநில அளவில் எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதும் பேசப்படலாம். கூட்டம் முடிந்த பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலை முன்னிட்டு தவெகவின் அடுத்த கட்ட அரசியல் பயணத்திற்கு இந்தக் கூட்டம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!