இன்று விஜய் தலைமையில் தவெக செயற்குழுக் கூட்டம்!

 
தவெக
 


 
தமிழக வெற்றிக் கழகத்தின்  மாநில செயற்குழுக் கூட்டம் இன்று ஜூலை 4, 2025ம் தேதி  சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்  நடைபெறுகிறது. இன்று காலை சரியாக 10 மணிக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான தேர்தல் வியூகங்கள் மற்றும் விஜய்யின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.  

 தவெக என்றாலே இப்ப எல்லோருக்கும் பயம் தான்... புஸ்ஸி ஆனந்த் அட்ராசிட்டி !  
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இந்தக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளும், கட்சியின் எதிர்காலத் திட்டங்களும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில்  மாநில செயற்குழு உறுப்பினர்கள், தலைமை அலுவலக நிர்வாகிகள், சிறப்பு குழு உறுப்பினர்கள், மண்டல மற்றும் மாவட்ட செயலாளர்கள், மற்றும் கட்சியின் இணைப்பு அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.   கட்சித் தலைவரால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும். மேலும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி கே.ஜி. அருண்ராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில், தவெகவின் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது. கட்சியின் பூத்-நிலை அமைப்பை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஜய்யின் மாநில சுற்றுப்பயணத்தின் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

 தவெக

அதே சமயம், இந்த செயற்குழுக் கூட்டம், தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கியமான படியாக கருதப்படுகிறது. கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் பிரிவுகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பிற முக்கிய தலைவர்களின் பங்களிப்புடன், தவெகவின் எதிர்கால உத்திகள் மற்றும் 2026 தேர்தல் தயாரிப்பு இந்தக் கூட்டத்தில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் நடந்து முடிந்த பிறகு கூட்டத்தில் நடந்த விஷயங்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது