ஜூலை 4ம் தேதி தவெக மாநில செயற்குழு கூட்டம்!
Jun 30, 2025, 19:40 IST

ஜூலை 4ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் தவெக மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
— TVK Party HQ (@TVKPartyHQ) June 27, 2025
இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநில அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள், தேர்தலுக்கான வியூகங்கள், விஜய்யின் தமிழக சுற்றுப்பயணம் குறித்த திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!