2027 தேர்தல் போட்டி என்பது பாஜக - ஆம் ஆத்மி கட்சி இடையேதான்... வெற்றிக்குப் பின் கெஜ்ரிவால் சூளுரை!

 
கெஜ்ரிவால்  சூளுரை


 
 குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற  இடைத்தேர்தல்  2027 சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என  ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  பொதுத் தேர்தலில் பாஜக - ஆம் ஆத்மி கட்சி இடையேதான் போட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம்  மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்  ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் முடிவுகள் குறித்து  அரவிந்த் கேஜ்ரிவால், "குஜராத் மற்றும் பஞ்சாப் இடைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் 2022-ல் நாங்கள் வென்றதை விட கிட்டத்தட்ட 2 மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இதன்மூலம், பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி ஆட்மி மீதான தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கெஜ்ரிவால்  சூளுரை

குஜராத்தில்  ஆம் ஆத்மி வேட்பாளரும், கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான கோபால் இத்தாலியா, தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளார். பாஜகவின் கிரித் படேல் 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.  குஜராத் மக்கள் இப்போது  ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பஞ்சாபிலும், குஜராத்திலும் ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரசும், பாஜகவும் முயன்றன.  குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களின் இடைத்தேர்தல்களிலும் இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

2027-ல் பஞ்சாப், குஜராத்  மாநிலங்களில்  சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  ஆம் ஆத்மி கட்சியின் புயல் வீசும். குஜராத்தைப் பொறுத்தவரை, 2027 தேர்தல் போட்டி என்பது பாஜக - ஆம் ஆத்மி கட்சி இடையேதான் இருக்கும். பாஜகவை தீர்க்கமாக எதிர்க்கும் கட்சியாக, வலுவுள்ள கட்சியாக குஜராத் மக்கள் ஆம் ஆத்மியைத்தான் பார்க்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.  

கெஜ்ரிவால்  சூளுரை
குஜராத்தில் 2027ல்  ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமையும் என்று அம்மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் இசுதன் காத்வி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து அவர்   "இது விசாவதர் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களின் வெற்றி. இது குஜராத் மக்களின் வெற்றி. பாஜக இங்கு பிரபலமாக இல்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும். அது பணத்தாலும், அதிகாரத்தாலும் வேட்டையாடுகிறது. குஜராத்தில் பாஜகவை யாராவது தோற்கடிக்க முடியும் என்றால், அது ஆம் ஆத்மி தான்  என்பது இப்போது உறுதியாகிவிட்டது.   2027 இல் குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பதற்கான தொடக்க நிகழ்வுதான் இந்த வெற்றி" எனக் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது