50 ஆண்டுகால சகாப்தம்... எளிமை தான் அடையாளம்... ஏவிஎம் சரவணன் காலமானார்!

 
ஏவிஎம் சரவணன்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தூண்களில் ஒருவராக அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் திகழ்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள், வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86. நேற்றுதான் அவர் தனது பிறந்த நாளைக் குடும்பத்துடன் கொண்டாடிய சூழலில் இன்று அவர் மறைந்தது திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏவிஎம் சரவணன்

ஏவிஎம் சரவணன் அவர்கள், அவரது தந்தையின் காலத்துக்குப் பிறகு ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை அதன் பாரம்பரியம் சிறிதும் மாறாமல் நிர்வகித்து வந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கதைத் தேர்வு மற்றும் நிர்வாகத்தில் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அமைதியாகப் பேசுபவர். வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை அணிவது இவருடைய தனித்த அடையாளமாக இருந்தது. பெரிய பின்புலம் இருந்த போதும், எவர் முன்பும் கைகட்டி இருக்கும் அவரது எளிமை பலரால் போற்றப்பட்டது.

ஏவிஎம் சரவணன்

தன் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால், அதற்காகத் தன் கைப்பட நன்றிக் கடிதம் எழுதி அனுப்பும் உயர்ந்த வழக்கம் இவரிடம் இருந்தது என்று திரையுலகினர் இப்போதும் நினைவு கூர்கின்றனர். இவர் தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களை ஏ.வி. எம் நிறுவனம் வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். சினிமாப் படங்கள் போலவே தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வெற்றிகண்டார். 

சினிமா பிரபலங்கள் பலரும் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மறைந்த சரவணனின் உடலடக்கம் இன்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெறுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!