கணவனின் பிறப்புறுப்பை துண்டித்து கோடாரியால் வெட்டிக் கொன்ற 5ஆவது மனைவி !!

 
மனைவி

20 தூக்க மாத்திரைகள் கொடுத்து கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் குடியிருப்புக்கு அருகே புதர் நிறைந்த பகுதியில் பிரேந்தர் குர்ஜார் என்பவர் சடலமாக கிடந்துள்ளார். அவருடன் வசித்துவந்த 5ஆவது மனைவி வீட்டில் இல்லாத நிலையில், இது குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது, பிரேந்தர் குர்ஜார் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். பின்னர் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரேந்தர் குர்ஜாரின் மனைவி காஞ்சன் குர்ஜாரின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மனைவி

கணவன் இறந்து தாமதமாக வந்து அழுதுள்ளார் 5ஆவது மனைவி. அவரை தொடர்ந்து கண்காணித்தபோது அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. பின்னர் அவரை தனியாக பிடித்துச்சென்று நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. பிரேந்தர் குர்ஜாருக்கு ஏற்கனவே 4 திருமணங்கள் நடந்துள்ளது. அவருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால் மனைவிகள் அனைவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றனர்.

இதையடுத்து பிரேந்தர் குர்ஜார் ஐந்தாவதாக காஞ்சன் குர்ஜாரை திருமணம் செய்து கொண்டார். அவர், தினமும் குடித்துவிட்டுவந்து மனைவியைச் சித்ரவதை செய்துள்ளார். இதனால் கணவனைக் கொலை செய்ய மனைவி திட்டமிட்டார்.

மனைவி

அதன்படி சம்பவத்தன்று பாலில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து கணவனுக்குக் கொடுத்துள்ளார். அதைக் குடித்து விட்டு மயக்கமடைந்த பிரேந்தர் குர்ஜாரை காஞ்சன் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது பிறப்புறுப்பையும் துண்டித்துள்ளார்.

பின்னர் உடலை எரிந்து கிராமத்திற்கு வெளியே புதரில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web