6 மாத கரு கலைந்து.. உயிரும் போனது... கர்ப்பிணி மகள் ஆணவக் கொலை... தந்தை வெறித்தனம்!

 
ஆணவக்கொலை  காதல் கெளரவக் கொலை

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு கொடூரமான கௌரவக் கொலை அரங்கேறியுள்ளது. தலித் இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

காதல் திருமணம் முதல் கிராமம் திரும்பியது வரை:

ஹுப்பள்ளி இனாம்-வீரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மான்யா (20) என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா என்ற தலித் இளைஞரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு மான்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜாதித் தடையை மீறி, கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பெற்றோரின் கோபத்திற்குப் பயந்து, இருவரும் சில மாதங்கள் ஹவேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர்.

கர்ப்பிணி

மரண வீடாக மாறிய வீடு:

தங்கள் மீது தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் இருந்த கோபம் குறைந்திருக்கும் என நம்பி, கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இந்த ஜோடி மீண்டும் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியுள்ளது. ஆனால், ஆத்திரம் குறையாத மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா, அடிக்கடி விவேகானந்தாவின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு பிரகாஷ் கெளடா தனது இரண்டு மகன்களுடன் ஆயுதங்களை ஏந்தி விவேகானந்தாவின் வீட்டிற்குள் புகுந்தார். கையில் இருந்த இரும்புக் கம்பிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் மான்யா, விவேகானந்தா மற்றும் அவரது பெற்றோரைச் சராமாரியாகத் தாக்கினர்.

வளைகாப்பு கர்ப்பம் கர்ப்பிணி

6 மாதக் கரு கலைந்தது.. உயிரும் போனது!

படுகாயமடைந்த அனைவரும் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 மாதக் கர்ப்பிணியாக இருந்த மான்யா, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விவேகானந்தாவும் அவரது பெற்றோரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா மற்றும் அவரது இரண்டு சகோதரர்களைக் கைது செய்துள்ளனர். ஒரு மகளின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாமல், பிறக்காத ஒரு உயிரையும் ஜாதி வெறி பலி வாங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!