மே 3ம் தேதி 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு தொடக்கம்!

 
தர்மபுரி


தமிழகத்தில் சென்னையில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு மே 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தர்மபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். இது குறித்து  தர்மபுரம் ஆதீனத் திருமடத்தில்  “  தமிழையும், சிவநெறியையும், சைவ சித்தாந்தத்தையும் உலகெங்கும் பரவச் செய்யும் வகையில், தர்மபுரம் ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1984ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  

தர்மபுரி ஆதினம்


இந்நிறுவனத்தின் சாா்பில் இதுவரை தர்மபுரம், மலேசியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய ஐந்து இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தர்மபுரம் ஆதீனம் சாா்பில் சைவசித்தாந்த மாலை நேரக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளன. தற்போது தர்மபுரம் ஆதீனமும், எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக நிறுவனா் பாரிவேந்தரும் இணைந்து, 6வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்துடன் சென்னை, காட்டாங்குளத்தூரில் மே 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. 'சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்தப் பதிவுகள்' எனும் பொதுத் தலைப்பின்கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

தர்மபுரி ஆதினம்
இந்த மாநாட்டுக்கு, பிரதமா், அனைத்து மாநில முதல்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சைவ ஆதீனங்களின் குருமகா சந்நிதானங்கள், ஆளுநா்கள், உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சா்கள், சிவாசாரியா்கள், பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், சைவசமய அறிஞா்கள், ஆலய அறங்காவலா்கள், ஆலய நிா்வாகிகள், சமய ஆா்வலா்கள், சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, லண்டன், ஜொமன், சுவிட்சா்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உட்பட  பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞா்கள் கலந்து கொள்கின்றனர். 


இம்மாநாட்டுக்கான சிறப்பு மலா், ஆய்வாளா்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை, பத்துக்கு மேற்பட்ட நூல்கள் ஆகியன வெளியிடப்படவுள்ளன. மாநாட்டினை முன்னிட்டு முதல்கட்டமாக சிறப்பு மலா்குழு, கருத்தரங்க குழு, நூல்வெளியீட்டு குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட ஆய்வாளா்கள், சான்றோா்கள் பங்கேற்கவுள்ளனா் எனக் கூறியுள்ளனர்.  இதனைத் தொடா்ந்து, குருமகா சந்நிதானம் மாநாட்டு விவரக்குறிப்பை வெளியிட, அதனை அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன பதிவாளா் சு.ராஜேஸ்வரன், சைவ சித்தாந்த மாநாட்டுக்குழுத் துணைத் தலைவா் பி.ரெங்கராஜன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். அப்போது, ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், மாநாட்டுக்குழு செயலா்கள் பி.அரவிந்தன், இரா.செல்வநாயகம், பொருளாளா்கள் எம்.வெற்றிவேல், சி.சுவாமிநாதன் உட்பட  பலா் கலந்து கொண்டனா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web