95 வயது... பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் சிஇஓ பதவியில் இருந்து வாரன் பஃபெட் விலகல்!

 
வாரன் பஃபெட்

உலகின் சமயோசிதமான, பிரசித்தி பெற்ற முதலீட்டாளராக வாரன் பஃபெட், இன்று வரையிலும் ஷேர் மார்க்கெட் அபிமானிகளால் இன்றளவிலும் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதியன்று பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 95 வயதான அவர், 1965 முதல் 60 ஆண்டுகள் நிறுவனத்தை வழிநடத்தினார். வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், நிர்வாகத் தலைவராக தொடர்வார் என நிறுவனம் தெரிவித்தது.

வாரன் பபெட்

நஷ்டத்தில் இருந்த ஜவுளி நிறுவனமாக இருந்த பெர்க்ஷயர் ஹாத்வே, பஃபெட்டின் தலைமையில் உலகின் முன்னணி நிறுவனமாக மாறியது. காப்பீடு, ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து நிறுவனம் பெரும் வளர்ச்சி கண்டது. இன்று அதன் மொத்த மதிப்பு 900 பில்லியன் டாலராக உள்ளது.

வாரன் பஃபெட்

“பங்குச் சந்தையின் தந்தை” என அழைக்கப்படும் பஃபெட்டின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்யாத அவரது அணுகுமுறை பலருக்கு ஆச்சரியம் அளித்தது. ஓய்வு பெற்றாலும், பொறுமை மற்றும் நீண்டகால முதலீடு என்ற அவரது கொள்கை உலக முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!