ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் விபரீதம்.. டெம்போ ஓட்ட பழகியவரால் 2 பெண்கள் உயிரிழப்பு!

 
டெம்போ

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம், தஹானு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் ஒதுக்குப்புறமான சாலை ஒன்றில் டெம்போ ரக வாகனம் ஒன்றை ஒருவர் ஓட்டப் பழகிக் கொண்டிருந்த போது, வாகனத்தை ஓட்டிய நபர் போதிய அனுபவம் இல்லாததால், திடீரென வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளார். இதில் டெம்போ தாறுமாறாக ஓடி, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து

விபத்து நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் ஓடி சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயிற்சியாளர் இன்றி பொதுச் சாலையில் வாகனம் ஓட்டப் பழகிய அந்த நபரை மக்கள் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பால்கர் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனத்தை ஓட்டிய நபர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து

வாகனம் ஓட்டப் பழகுபவர்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட காலியான மைதானங்களில் மட்டுமே பயிற்சி பெற வேண்டும் என்றும், பொதுச் சாலைகளில் பயிற்சி பெறும்போது கண்டிப்பாக அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் பயிற்சியாளர் உடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!