கும்பமேளாவிற்கு சென்று திரும்பிய போது கோர விபத்து.. காரில் இருந்த 5 பயணிகளும் உயிரிழந்த சோகம்!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெறுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் தியோலி பகுதியைச் சேர்ந்த முக்த் பிஹாரி தனது மனைவி ஹுடே தேவி மற்றும் குடும்ப உறுப்பினர்களான நந்தி சோனி, ராகேஷ் மற்றும் நபிர் ஆகியோருடன் கும்பமேளாவிற்குச் சென்றார்.
இந்த நிலையில், இன்று கும்பமேளாவிற்குச் சென்றுவிட்டு அனைவரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ஓட்டிச் சென்றவர் திபேஷ் பர்வானி. ராஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில், காரில் இருந்த 5 பயணிகளும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த திபேஷ் படுகாயமடைந்தார்.
இதேபோல், லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரும் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த 3 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இறந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!