ஜல்லிக்கட்டு காளைகளை வீரமாக வளர்க்கும் வீர மங்கைகள்.. நெகிழ வைக்கும் கல்லூரி மாணவிகள் செயல்..!!

 
 ஜெனிபர் - லாவண்யா

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து போட்டியில் களமிறக்கி விடும் கல்லூரி மாணவிகளின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது...

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொட்டமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஜெனிபர், லாவண்யா ஆகியோர் காளைகளை வளர்த்து வருகின்றனர். திருச்சி தேசிய கல்லூரியில் பி.காம் படிக்கும் மாணவிகள் இருவரும் கல்லூரி நேரத்தில் தாங்கள் வளர்க்கும் காளைகளை பராமரித்து வருகின்றனர். இந்த மாணவிகள் காளைகளை குடும்ப உறுப்பினராக கருதி, சத்தான உணவுகளை வழங்கி பராமரித்து வருகின்றனர்.



தற்போது ஜல்லிக்கட்டு களைகட்டத் தொடங்கியுள்ளதால், போட்டிக்காக தங்களது காளைகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக காளைகளுக்கு மண் குத்தியும், நீச்சல் பயிற்சியும் அளித்து வரும் கல்லூரி மாணவிகள் , திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் அமோகமாக காளைகளை ஓட விடுவார்கள்.

கல்லூரி மாணவிகளான ஜெனிபர், லாவண்யா ஆகியோருக்கும் குடும்ப ஆதரவு உண்டு. இதனால் தான் ஆர்வத்துடன் ஏராளமான காளைகளை வளர்த்து போட்டியில் களமிறக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டு வளர்ப்பு ஆண்களுக்கு மட்டுமே என்ற காலம் போய் தற்போது பெண்களும் காளைகளை வளர்ப்பது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web