வாழ வேண்டிய வயசு... நிமிஷ நேர அவசரத்தால உயிரை இழந்த இளைஞன்!

 
அபிஷேக்

வாழ வேண்டிய வயசு சார்... நிமிஷ நேர அவசரத்துல உயிரை பரிதாபமாக இழந்திருக்கான்... இந்த காலத்து பசங்க எல்லாத்துலேயுமே நிதானமில்லாம அவசரப்படுறாங்க... என்று பேப்பரைப் படித்துக் கொண்டே டீக்கடையில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆமாம்... இந்த காலத்து இளைஞர்கள் எல்லாவற்றிலும் அவசரப்படுகிறார்கள். மரணத்திலும் கூட அவசரம் தான். அம்மா திட்டுறாங்க... தோழி பேசலை... காதலி போனை எடுக்கலை... ஆசிரியர் மார்க் போடலை... செல்போனை பிடுங்கி வெச்சுக்கிட்டாங்க என்று அவர்கள் தற்கொலைச் செய்து கொள்வதற்கும் இது போன்ற சாதாரண நிகழ்வுகளே போதுமானதாக இருக்கிறது.

அவசர அவசரமாக லிப்டிற்குள் நுழைந்த அபிஷேக், கதவைச் சரியாக சாத்தியிருக்கிறதா என்று பார்க்காமலேயே இயக்கியதில் உடல் துண்டாகி உயிரை இழந்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில்  பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் பாயாக பணிபுரிந்து வருபவர் அபிஷேக். பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் அபிஷேக்,  ஸ்டார் ஹோட்டலின் 9வது மாடிக்கு லிஃப்டில் சென்று கொண்டிருந்த போது, லிப்ஃட் கதவு சரியாக முழுவதும் மூடாமல் இருந்துள்ளது. அதை கவனிக்காமல் லிப்ஃட்டை அபிஷேக் இயக்கி உள்ளார். இதனால், ஹோட்டல் ஊழியர் அபிஷேக் உடல் சம்பவ இடத்திலேயே கால்கள் தனியாகவும் உடல் தனியாகவும் இரண்டு துண்டுகளாக துண்டிக்கப்பட்டது.  

அபிஷேக்

லிப்ட் கதவு முழுமையாக மூடாமல் லிப்ட் இயங்கியதால் 7வது மற்றும் 8வது மாடிகளுக்கு இடையே சிக்கி  கொண்ட அபிஷேக்கின் உடல் இரு துண்டுகளானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வீஸ் லிஃப்டில் நடந்த இந்த விபத்து குறித்து தெரியாமலேயே இருந்துள்ளது. நீண்ட நேரமாக சர்வீஸ் லிஃப்ட் கீழே வரவில்லை என்பதால் ஹோட்டலின் மற்ற ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இது குறித்து ஆய்வு செய்த போது தான் இந்த விபத்து நடந்ததும், விபத்தில் அபிஷேக் உயிரிழந்ததும் கண்டறியப்பட்டது.  

அபிஷேக்

அதிர்ந்து போன ஹோட்டல் ஊழியர்கள் நிர்வாகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சென்னை முழுவதுமே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியுளளது. சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லிப்ஃடில் ஏறிய அபிஷேக் விபத்தில் சிக்கியது  குறித்தும், அவர் உயிரிழந்தது குறித்தும் ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web