மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு!
காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடிப் பணிகளுக்காகத் தண்ணீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று (டிசம்பர் 12) முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் சாகுபடிப் பணிகளுக்காகக் கடந்த சில வாரங்களாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் நீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு, நேற்று மதியம் முதல் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்குத் தொடர்ந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு (நீர்வரத்து) குறைவாக உள்ளது. நீர்வரத்து: வினாடிக்கு 2,432 கன அடியாக உள்ளது.
நீர் மட்டம்: அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணை நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று நிலவரப்படி அணை நீர்மட்டம் 115.77 அடியாக இருந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
