இன்று மதியம் வளைய சூரிய கிரகணம் - மாலை வரை நீடிக்கும்... இந்தியாவில் தெரியுமா?!

 
சூரிய கிரகணம்

இன்று மதியம் வானில் ஒரு அபூர்வ நிகழ்வாக 'வளைய சூரிய கிரகணம்' நிகழ்கிறது. சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும்போது, சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து, அதன் விளிம்புகளை ஒரு 'நெருப்பு வளையம்' போலத் தெரிய வைப்பதே இந்த வளைய சூரிய கிரகணம் ஆகும்.

இன்று சந்திரன் பூமிக்குச் சற்றுத் தொலைவில் இருப்பதால், சூரியனை முழுமையாக மறைக்க முடியாமல் அதன் நடுப்பகுதியை மட்டும் மறைக்கும். இதனால் சூரியன் ஒரு பிரகாசமான மோதிரம் அல்லது வளையம் போன்ற தோற்றத்தை அளிக்கும். துரதிர்ஷ்டவசமாக, இன்றைய சூரிய கிரகணம் இந்தியாவில் எங்கும் தெரியாது.

சூரிய கிரகணம்

அண்டார்டிகா, தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகள், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மட்டுமே இந்த வளையக் காட்சி தெளிவாகத் தெரியும். அர்ஜென்டினா, சிலி மற்றும் ஆப்பிரிக்காவின் தெற்கு முனை நாடுகளில் சூரியன் ஒரு பகுதி மறைக்கப்பட்ட நிலையில் காணப்படும்.

இந்நிகழ்வு இந்திய நேரப்படி (IST) மதியம் தொடங்கி மாலை வரை நீடிக்கிறது. இன்று மதியம் 12:48 மணி (IST)க்கு துவங்கும் சூரிய கிரகணம் உச்சநிலை மதியம் 3:12 மணிக்கும் (IST),  மாலை 5:36 மணிக்கு (IST) நிறைவடைகிறது.

சூரிய கிரகணம்

இந்தியாவில் வசிப்பவர்கள் இதனை நேரடியாக வானில் பார்க்க முடியாது. இருப்பினும், நாசா மற்றும் பல்வேறு வான் இயற்பியல் நிறுவனங்கள் இதனைத் தங்களது யூடியூப் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஆன்லைன் மூலம் இந்த 'நெருப்பு வளையக்' காட்சியைப் பாதுகாப்பாகக் காணலாம்.

இன்று 'பல்குண அமாவாசை' என்பதால், வானியல் ரீதியாகச் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. கிரகணம் தெரியும் நாடுகளில் உள்ளவர்கள், எக்காரணம் கொண்டும் வெறும் கண்களால் சூரியனைப் பார்க்கக் கூடாது. இதற்கென வடிவமைக்கப்பட்ட 'சோலார் ஃபில்டர்' கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இன்றைய சூரிய கிரகணம் இந்தியர்களுக்கு வானில் காணக் கிடைக்காது என்றாலும், அறிவியல் ரீதியாக இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். குறிப்பாக அண்டார்டிகா பகுதியில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இது சூரியனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யப் பெரும் உதவியாக இருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!