சோதனை ஓட்டத்தில் சரிந்த ரோப் கார்… தப்பி ஓட்டம் பிடித்த பொதுமக்கள்...

 
ரோப்
 

 

பீகார் மாநிலம் ரோஹ்தஸ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வந்த ரோப் கார் வசதி, வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டத்திலேயே இடிந்து விழுந்தது. ரோப் கார்கள் மட்டும் இயக்கி சோதனை செய்தபோது, அவற்றை தாங்கிய தூண்கள் திடீரென சரிந்து, கார்கள் கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோஹ்தஸ்கர் கோட்டையிலிருந்து ரோஹிதேஸ்வர் தாம் வரை 1,300 மீட்டர் நீளத்தில் ரோப் கார் சேவை அமைக்கப்பட்டு வந்தது. முதற்கட்டமாக நான்கு கார்கள் பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு தூண் சரிந்து, அனைத்து கார்கள் ஒன்றாக விழுந்தன. அருகில் இருந்த தொழிலாளர்கள் ஓடி தப்பியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

கயிறு சிக்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ரூ.12 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த திட்டம் சோதனையிலேயே சரிந்தது மக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. “இது விபத்து அல்ல, ஊழல்” என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!