திமிரும் காளைகள்... தயார் நிலையில் வீரர்கள்... இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 
ஜல்லிக்கட்டு

தமிழர் வீர விளையாட்டின் சிகரமாகக் கருதப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை கோலாகலமாகத் தொடங்குகிறது. முன்னதாக மதுரை விமான நிலையம் வந்திறங்கும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபடுகிறது. 

இன்று காலை சரியாக 8 மணிக்கு முதல் காளையாகக் கோவில் காளை அவிழ்த்து விடப்பட உள்ளதுது. அதனைத் தொடர்ந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். 

ஸ்டாலின்

சிறந்த மாடுபிடி வீரருக்கு: தமிழக முதல்வர் சார்பில் நிசான் மேக்னைட் கார் (Nissan Magnite Car) வழங்கப்பட உள்ளது. சிறந்த காளைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட உள்ளது.

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவல் திடல் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறுவது கூடுதல் சிறப்பு.

மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு

சுமார் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளைச் சோதிக்கத் தனித்தனியாக மருத்துவக் குழுக்கள் மைதானத்திலேயே தயார் நிலையில் உள்ளனர். வீரர்கள் அடக்கிய காளைகளின் எண்ணிக்கையை உடனுக்குடன் தெரிவிக்க டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!