காலத்தை வென்ற கலைஞன்.. நடிகர் மயில்சாமியின் வாழ்க்கை பயணம்!

 
மயில்சாமி

நல்ல நடிகர் என்று எல்லோரும் தங்களது இரங்கல் செய்திகளில் சொல்கிறார்கள். நல்ல மனிதராகவும் வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி. தீவிர எம்.ஜி.ஆர். பக்தரான நடிகர் மயில்சாமி, அவரது வீடு இருந்த சாலிகிராமம் பகுதியில் பல வருடங்களாகவே இல்லாதவர்களுக்கு ஓடி ஓடி உதவிகளை செய்து வந்துள்ளார். சென்னை பெருவெள்ளம், கொரோனா காலத்தில் இவரது வீட்டில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு தினந்தோறும் உணவுப் பொட்டலங்கள் சென்று  கொண்டிருந்தன.

சென்னை பெருவெள்ள காலங்களில், தோணியில் சாப்பாடு பொட்டலங்களையும், நிவாரணப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு, கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை வீடு தேடிப் போய் உதவிகள் செய்வதவர் நடிகர் மயில்சாமி. அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டுக்கு சென்று திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துவதை காண முடிகிறது.

மயில்சாமி 1965ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று பிறந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இவருக்கு, சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராத ஆர்வம் இருந்தது.

மயில்சாமி

1984ம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் மயில்சாமி தோன்றினார். அடுத்தாண்டே கன்னி ராசி படத்தில் டெலிவரி பாயாக நடித்தார். 1989ஆம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா படங்களில் மயில்சாமி நடித்திருப்பார்.

பின்னர் திரையுலகில் பெயர்பெற்ற மயில்சாமி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால், 2000ஆம் ஆண்டுக்கு பிறகு விவேக் மற்றும் வடிவேலுவுடன் கூட்டணி சேர்ந்தார். பின்னர், இவரது புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. 

மயில்சாமி

குறிப்பாக, பாளையத்தம்மன் படத்தில் விவேக்குடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் போலி சாமியாராக இவர் நடித்த காமெடி பட்டி தொட்டியெங்கும் பிரபலம். இப்போதும் அந்த காமெடி காட்சி வைரலாகி வருகிறது. 

 அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், கெளதம் கார்த்திக், அதர்வா, உதயநிதி ஸ்டாலின், சந்தானம், லெஜண்ட் சரவணன் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் மனதில் நீக்கமற நிறைந்துள்ளார். உடன்பால் என்ற படத்தில் கடைசியாக அவர் நடித்துள்ளார். 

 நடிகராக மட்டுமில்லாமல் இவர் தீவிர அரசியல்வாதியும் ஆவர். ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.க-வில் இருந்ததார்  கடந்த சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். மேலும் அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பேசிவந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது. தற்போது அவரது மறைவு ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web