5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை கூட்டத் தொடர் தொடக்கம்!

 
அப்பாவு


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 14ம் தேதி  2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது .  மார்ச் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது. 

சட்டப்பேரவை

அதனைத் தொடர்ந்து, மார்ச் 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 9ம் தேதி  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதையடுத்து மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு, தமிழ் புத்தாண்டு என 5 நாட்கள் சட்டசபைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது.

சட்டப்பேரவை


இந்நிலையில், 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடி  கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். கேள்வி நேரம் முடிந்ததும், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.  

தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார். முன்னதாக செய்தி, விளம்பரத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web