பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி... 13 இடங்களில் எலும்பு முறிவு - 6 வயது மகளை அடித்துக் கொன்ற தந்தை, சித்தி கைது!
பெற்ற மகளென்றும் பாராமல், ஈவு இரக்கமின்றி ஒரு பிஞ்சு குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தந்தையின் செயல் காசியாபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் மாவட்டம் தாஸ்னா பகுதியைச் சேர்ந்த அக்ரம் என்பவரது 6 வயது மகள் ஷிபா. அக்ரமின் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், அவர் நிஷா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடும் போது ஷிபா தவறி சேற்றில் விழுந்துள்ளார். இதனால் அவரது உடைகள் அழுக்காகியுள்ளன. அழுக்குத் துணியுடன் வந்த குழந்தையைப் பார்த்த அக்ரமும், அவரது மனைவி நிஷாவும் ஆத்திரமடைந்து குழந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு, இரவு முழுவதும் உறைபனி குளிரில் அந்தச் சிறுமியை வீட்டின் மாடியிலேயே இருக்கச் செய்து சித்ரவதை செய்துள்ளனர்.

அடுத்த நாள் காலை குழந்தை ஷிபா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன: குழந்தையின் உடலில் தலை முதல் கால் வரை மொத்தம் 13 இடங்களில் பலத்த காயங்கள் இருந்துள்ளன. சித்ரவதையின் உச்சகட்டமாகச் சிறுமியின் விலா எலும்புகள் முறிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் தந்தை அக்ரம் மற்றும் சித்தி நிஷா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
