“விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட்...” இந்திய விண்வெளித் துறையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கியப் பங்குகள், நிறுவனங்கள்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இன்று உலகளவில் வணிக ரீதியிலான விண்வெளிச் சந்தையில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ள 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள் திட்டம், விண்வெளித் துறையைச் சார்ந்த இந்திய நிறுவனங்களின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.
விண்வெளித் துறையின் இந்த அசுர வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியப் பங்குகள் லிஸ்ட் பார்க்கலாம் வாங்க. நீங்கள் ஆய்ந்தறிந்து, முதலீடு குறித்த உங்கள் முடிவை சுயமாக எடுங்க.

முன்னணி பொதுத்துறை நிறுவனங்கள் (Large-Cap PSUs): இந்த நிறுவனங்கள் இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பில் பல தசாப்தங்களாக முதுகெலும்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL): விண்வெளி ஓடங்கள், ராக்கெட் கட்டமைப்புகள் மற்றும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL): விண்வெளிக்குத் தேவையான மின்னணு சாதனங்கள், ரேடார்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது.
முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் (Key Private Players): இஸ்ரோவின் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) நீண்டகாலமாக இணைந்து பணியாற்றும் முன்னணி நிறுவனங்கள் இவை.

லார்சன் & டூப்ரோ (L&T): இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் நிறுவனமான இது, ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளங்கள் மற்றும் உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
எம்.டி.ஏ.ஆர் டெக்னாலஜிஸ் (MTAR Technologies): கிரையோஜெனிக் இன்ஜின்கள் மற்றும் ராக்கெட்டுகளுக்குத் தேவையான மிகத் துல்லியமான பாகங்களைத் தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது.
டேட்டா பேட்டர்ன்ஸ் (Data Patterns): செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குகிறது.
சிறப்புப் பிரிவில் வளரும் நிறுவனங்கள் (Niche & Mid-Cap):
பாரத் ஃபோர்ஜ் (Bharat Forge): ராக்கெட் இன்ஜின்களுக்குத் தேவையான உலோகப் பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
அஸ்ட்ரா மைக்ரோவேவ் (Astra Microwave): செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்குத் தேவையான மைக்ரோவேவ் தொழில்நுட்பங்களை வழங்குகிறது.
பாரஸ் டிஃபென்ஸ் (Paras Defence): விண்வெளி ஆய்வகங்களுக்குத் தேவையான ஆப்டிகல் (Optical) மற்றும் இமேஜிங் கருவிகளைத் தயாரிக்கிறது.
அவான்டெல் (Avantel): கடல்சார் தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் சார்ந்த தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றது.
முதலீட்டாளர்களுக்கான குறிப்பு:
விண்வெளித் துறை என்பது நீண்ட கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. 2033-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 44 பில்லியன் டாலராக உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இருப்பினும், பங்குச் சந்தை முதலீடுகள் அபாயத்திற்கு உட்பட்டவை என்பதால், முதலீடு செய்யும் முன் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
