120 பேர் பலி.. 3000க்கும் அதிகமானோர் படுகாயம்... இணைய தள சேவைக்கான தடை மேலும் நீட்டிப்பு!

 
இணையதளசேவை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.  மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை அங்கு ஏற்கனவே பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் இதனை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

வைஃபை இணைய வசதி இண்டர்நெட்

இதனையடுத்து மே மாதம் 3ம் தேதி முதல் கடும்மோதல் நிலவி வருகிறது.  இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 
இருந்த போதிலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் காவல்துறையும், ராணுவமும்  திணறி வருகின்றன.  மணிப்பூர் மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில் இது வரை சுமார் 120 பேர் பலியாகி இருப்பதாகவும், 3000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  50,000க்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

மணிப்பூர்

இதனால் அங்கு தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.  மே3ம் தேதி முதல் , இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் மணிப்பூரில் ஜூலை 5ம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இணைய சேவை தடை தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கலவரங்கள் அடுத்தடுத்து நீடிப்பதை கருத்தில் கொண்டு  அதனை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web