மதுராந்தக மேடையில் பங்காளிச் சண்டை முடிவு... ‘நாங்க ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்’ எடப்பாடி உருக்கம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று (ஜனவரி 23, 2026) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
மதுராந்தகம் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுடன் இருந்த பழைய கசப்புகளை மறந்து, திமுகவை வீழ்த்துவதே தங்களின் தற்போதைய ஒரே இலக்கு என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

"நானும் டிடிவி தினகரனும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் எப்போது இணைந்தோமோ அப்போதே மறைந்து விட்டன" என்று உருக்கமாகத் தெரிவித்தார். எங்களுக்குள் இருந்தது குடும்பப் பிரச்சனை மற்றும் கட்சிப் பிரச்சனை தான். இப்போது அனைத்தையும் மறந்து அண்ணன், தம்பியாகச் செயல்பட்டு வருகிறோம். அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதே எங்களின் நோக்கம்.
வைகோ, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒருகாலத்தில் கடுமையாக விமர்சித்தவர்களுடன் இன்று கூட்டணி வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலனுக்காகவும், திமுக ஆட்சியை அகற்றவும் தாங்கள் இணைவதில் எந்தச் சங்கடமும் இல்லை எனக் கூறினார்.

"மக்களுக்கு விரோதமான இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்துவோம்" என்று முழங்கினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரனும், "எங்களுக்குள் பங்காளிச் சண்டை இருந்தது உண்மைதான், ஆனால் இப்போது அது தீர்ந்துவிட்டது. எதிரிகள் நாங்கள் பிரிந்திருப்போம் என்று கணக்கு போட்டார்கள்; ஆனால் நாங்கள் அம்மாவின் தொண்டர்களாக ஒன்றிணைந்து விட்டோம்" எனத் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
