தாயே செய்த துரோகம்... கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய கொடூரம் - சென்னையில் பரபரப்பு!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

சென்னை சாலிகிராமம் பகுதியில் தாயே, தனது கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ச்ன்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த காவலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் 20 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவரது மனைவிக்கு, தட்சிணாமூர்த்தி (50) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் இல்லாத நேரங்களில் தட்சிணாமூர்த்தி அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனை மகள் கண்டித்ததால், தாய் தன் மகளுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்ட மகளுக்குத் தாய் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். மகள் அயர்ந்து தூங்கிய நிலையில், தாயின் கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி அந்தப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் பிப்ரவரி 23ம் தேதியும் இதேபோல் தூக்க மாத்திரை கொடுத்து மகளைச் சீரழிக்க முயன்ற போது, விழித்துக் கொண்ட அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால், தாய் தனது மகளை மிரட்டி ஒரு அறைக்குள் தள்ளி பூட்டி வைத்துள்ளார். தாயின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண், திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவர் 7 வார காலம் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவக் குழுவினரின் அறிவுரைப்படி அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் கரு கலைக்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து செய்யாறு மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்த இடம் சென்னை என்பதால், வழக்கு வடபழனி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தியைப் பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!