கோவிலுக்கு வெளியே நிறுத்திய பைக் திருட்டு!! சிசிடிவியில் சிக்கிய வாகனத் திருடன்!!

வேலூர் மாவட்டம் பாகாயம் புதூர் பகுதியில் வசித்து வருபவர் 39 வயது சமையல் மாஸ்டர் ஞானம். இவர் மார்ச் 4ம் தேதி மனைவி, குழந்தையுடன் விருப்பாட்சிபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது கோயிலுக்கு வெளியே தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது, இவரது வாகனத்தை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் வாகனத்தை திருடிச் சென்று விட்டார்
இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் ஞானம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகன திருடனை தேடி வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சிசிடிவி காட்சியில் வாகனத்தை திருடுபவர் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் பல வாகனங்களை திருடியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன திருடனை தேடும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க