பகீர்... சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த பைக்..!
Jun 24, 2025, 10:55 IST
சென்னை பட்டினப்பாக்கம் அருகே பைக்கில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது. இதனைக்கண்ட நபர் அவசர அவசரமாக பைக்கை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதனையடுத்து பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தீயணைப்புத்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அந்த வாகனத்தை அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்தால் பட்டினப்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
