மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் - பாஜக கூட்டணி அமோக வெற்றி.. பிரதமர் மோடி வாழ்த்து!

 
பாஜக வெற்றி

மகாராஷ்டிராவில் நடைபெற்ற மாவட்டப் பரிஷத் உள்ளாட்சித் தேர்தலில், பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.  மொத்தம் உள்ள 12 மாவட்டப் பரிஷத்களில் உள்ள 731 இடங்களில், மஹாயுதி கூட்டணி 552 இடங்களைக் கைப்பற்றித் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, மஹாயுதி கூட்டணியில் பாஜக 225 இடங்கள் (தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது). தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி): 165 இடங்களிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி): 162 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

பாஜக

எதிர்க்கணிக் கூட்டணியான 'மகா விகாஸ் அகாடி' மிகவும் பின்தங்கியுள்ளது. காங்கிரஸ்: 55 இடங்களிலும், சிவசேனா (UBT - உத்தவ் தாக்கரே அணி): 43 இடங்களிலும், NCP (SP - சரத் பவார் அணி): 26 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

அஜித் பவாரின் NCP கட்சி 73-ல் 51 இடங்களை வென்று புனே மாவட்டப் பரிஷத்தை முழுமையாகக் கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 56-ல் 41 இடங்களை வென்று சாதனை படைத்தது. சிந்துதுர்க் மாவட்டத்தில் பாஜக 50-ல் 27 இடங்களை வென்று தனிப்பெரும் சக்தியாகத் திகழ்கிறது. பிற மாவட்டங்கள்: சோலாப்பூர், சதாரா, லத்தூர், பர்பானி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாஜக அதிக இடங்களைப் பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா பாஜக கூட்டணி

இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது எக்ஸ் தளத்தில், "மகாராஷ்டிரா மக்கள் மீண்டும் ஒருமுறை மஹாயுதி கூட்டணிக்குத் தங்களது ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். ஊரக மற்றும் நகர்ப்புற மகாராஷ்டிரா மக்கள் நல்லாட்சியையே விரும்புகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஜித் பவார் அவர்களின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால், NCP தொண்டர்கள் மத்தியில் இந்தப் பெரிய வெற்றி ஒரு உணர்ச்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!